
சென்னை:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை நடந்தது. நீதிமன்றம் நியமித்த தேர்தல் கமிட்டி முன்னிலையில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. நடிகர் விஷால், கேஆர், ராதாகிருஷ்ணன் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன. இதில் ரஜினிகாந்த், கமல் உள்பட பலர் வாக்களித்தனர். மாலை வாக்கு எண்ணிக்கை நடந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் இந்த வெற்றியை கொண்டாடினர். விஷால் 478 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 335 வாக்குகள், கேஆர் 224 வாக்குகளும் பெற்றனர். துணைத் தலைவர்கள் தேர்தலில் பிரகாஷ் ராஜூம், கவுதம் மேனனும் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel