மும்பை:

ரிலையன்ஸ் ஜியோ பிரைம் திட்டத்தில சேர ஏப்ரல் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பிரைம் திட்டத்தில் இது வரை 72 மில்லியன் பேர் இணைந்திருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஜியோ பிரைம் திட்டத்தில சேர இன்று (மார்ச் 31ம் தேதி) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்ததை வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டித்து ஜியோ அறிவித்துள்ளது.

99 ரூபாய் செலுத்தி உறுப்பினராகவும், தற்போதுள்ள வசதிகளை தொடர்ந்து பெற ரூ. 303 செலுத்தும் திட்டத்தில் கீழ் வரும் 15ம் தேதி வரை சேரலாம் என்று ஜியோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோடை கால திட்டமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு முன் ரூ. 303 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் தற்போது பெறும் இலவச சேவைகள், கூடுதல் பயன்கள் மேலும் 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

தற்போது ரீசார்ஜ் செய்யப்படும் திட்டம் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும். தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய போதுமான அவகாசம் வழங்கவும், சேவை துண்டிப்பை தவிர்க்கவும் இந்த அவகாசம் வழங்கப்பட்டள்ளது என்று ஜியோ தெரிவித்துள்ளது. எனினும் ஜியோ இலவச சேவை வரும் ஏப்ரல் 15ம் தேதியுடன் முடிந்துவிடும். இந்த தேதிக்கு பிறகு ரீசார்ஜ் செய்யாதவர்கள் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஒரு லட்சம் மொபைல் டவர்கள் மூலம் 4ஜி இணைய சேவை வழங்கப்படுகிறது. மேலும் அடுத்து வரும் மாதங்களில் கூடுதலாக ஒரு லட்சம் டவர்கள் பொறுத்தப்பட்டு இணைப்பு வழங்கப்படும்.

இதற்கு ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. உலகளவில் இது அதிக முதலீடாகும். சிறிய அளவில் நெட்வொர்க் பிரச்னை இருப்பது உண்மை தான். அது அடுத்து வரும் மாதங்களில் சரி செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளார்.