நொய்டா.
உத்தர பிரதேச மாநிலத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நொய்டா தொழிற் நகரம். இது டில்லிக்கு 20 கிலோ மீட்டர் (12 மைல்) தென்கிழக்கில் உள்ளது. தலைநகர் டில்லிக்கு அருகே உள்ள தலைசிறந்த தொழிற்நகரம் நொய்டா.
இங்கு உலகின் சிறந்த தொழிற்நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஏராளமாக உள்ளன.
இந்த தொழிற்நகரத்தில் இந்த மாதத்தில் மட்டும் 4 வெளி நாட்டை சேர்ந்தவர்கள் அந்த பகுதி மக்களால் தாக்கப் பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை, கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த கென்ய மாணவியை, நொய்டாவில் உள்ள நாலெட்ஜ் பார்க் அருகே ஆட்டோவை நிறுத்தி ஒரு கும்பல் ஆட்டோவினுள் இருந்து அந்த கென்ய மாணவியை வெளியே இழுத்து தள்ளினர்.
இதன் காரணமாக படுகாயம் அடைந்த அந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த திங்கள்கிழமை ஆப்பிரிக்க மாணவர் ஒருவர் இதுபோன்ற கும்பலால் கடுமை யாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுபோல் கடந்த வியாழக்கி ழமை நைஜிரிய மாணவர் ஒருவர் பன்சால் மாலில் வைத்து கும்பலால் தாக்கப்பட்டு குப்பை தொட்டியால் தள்ளப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் 3 ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் கடை பகுதி சென்றபோது கம்பால் தாக்கப்பட்டனர். இதுபோன்ற தொடர் தாக்குதல் காரணமாக நொய்டாவில் படித்து வரும் வெளிநாட்டு மாண வர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, கடந்த மாதம் 12 வயது பள்ளி மாணவன் ஒருவர் போதை மருந்து காரணமாக மரணம் அடைந்தார். அதிக அளவு போதை மருந்து உட்கொண்டதால் அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த போதை மருந்துகள் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களால் விநியோகிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு காரணமாகவே ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்படுகின்றனர் என்று கூறினர்.
மேலும், இதுபோல் ஒரு சம்பவம் இனிமேல் நடைபெறாததாவறு கண்காணிக்கப்படும் என்றும், நொய்டாவில் உள்ள கல்லூரி மற்றும் விடுதிகளுக்கு போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று கூறினர்.
இதுகுறித்து, மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் கூறும்போது, வெளிநாட்டினர் தாக்கப் பட்டது குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடைபெறும் என்றும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.
நொய்டாவில் வெளிநாட்டினர் தாக்கப்படுவது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது,
நொய்டாவில் ஆப்பிரிக்க நாட்டு மாணவர்கள்மீது தாக்குதல் நடைபெற்றது குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், அந்த பகுதிவாசிகளால் வெளிநட்டு மாணவர்கள் தாக்கக்படுவதை உடனே தடுத்து நிறுத்தும்படியும் கூறியுள்ளார்.