புதுக்கோட்டை:

மிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தும் விதமாக புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில் மத்திய அரசு நேற்று கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் போராடினர்.

அதைத்தொடர்ந்து மத்திய மாநில அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்கும் திட்டத்தில் மத்திய அரசு நேற்று கையெழுத்திட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த நெடுவாசல் மக்கள் நாளை முதல் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளனர்.

இதற்கிடையில்,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அந்த கூட்டத்தை  விவசாயிகள் புறக்கணித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.