டில்லி,
சரக்கு மற்றும் சேவை வரி துணை மசோதாக்கள் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் ழுட்டது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 7 துணை துணை மசோதாக்களை லோக் சபாவில் தாக்கல் செய்தார்.
வரும் ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மார்ச் 20ந்தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று 7 துணை மசோதாக்கள் தாக்கள் செய்யப்பட்டன. இந்த மசோதா மீதான விவாதம் 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். லோக் சபாவில் நிறைவேறிய பிறகு, ராஜ்யசபாவில் விவாதிக்கப்படும்.
அதன்பின் பின் சட்டமாக இயற்றப்படும்.
ஏப்ரல் 12ந்தேதியுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைய இருப்பதால், அதற்கு இதுகுறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
வரும் ஜூலை 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன் காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பீடு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஈடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.