சென்னை,
இந்தியாவில் இருக்கும் 28 மாநிலங்களை விட கேரளா பல்வேறு விசயங்களில் முன்னணியில் உள்ளது. எந்தெந்த விசயங்களில் கேரளா சிறப்பான நிலையை எய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாநிலங்களில் மத்தியபிரதேசம்தான் மனித வளர்ச்சி 36 சதவிதம் பெற்று முன்னணியில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை கேரளா பெறுகிறது. இதன் சதவிதம் 17 ஆகும். ஐக்கிய நாட்டுசபை பாராட்டுத் தெரிவித்துள்ளது.
குழந்தை இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 6 ஆக குறைந்துள்ளது. பிரசவ இறப்பு 30 ஆக குறைக்க கேரள அரசு முயற்சித்து வருகிறது.
இதேபோல் திருநங்கைகளுக்கான நலத்திட்டம் இங்குதான் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இடைநிறுத்தம் செய்யும் திருநங்கைகளின் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக பள்ளி இங்குதான் முதல்முறையாக திறக்கப்பட்டுள்ளது. இங்கு 10 மற்றும் 12 ம் வகுப்புத் தேர்வுகளுக்கு இணையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதேபோன்று பணபரிமாற்றம் இல்லாத கிராமம், ஒரு கிராமமே யோகா கற்றுக் கொண்டது, இந்தியாவிலேயே டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல்மாநிலம், ஆரம்பப் பள்ளியில் 100 சதவிதம், பாலின வேறுபாடு மிகக் குறைவாக இருக்கும் மாநிலம், இணைய சேவையை மனிதனின் அடிப்படை உரிமையாக்கிய முதல்மாநிலம் என பல்வேறு முக்கிய சிறப்புகளை கேரளா மாநிலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராமத்தில் வரதட்சணை வாங்கமாட்டோம் என உறுதி அளித்துள்ளனர்.
இப்படி பதினொரு விசயங்களில் முன்னணியில் இருக்கும் கேரளாவை மற்ற மாநிலங்கள் பின்பற்றினால் என்ன?