சென்னை,
தென்னிந்திய வர்த்தக சபை செயற்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தல் கண்காணிப்பாளராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஹரிபரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய வர்த்தக சபையின் சட்ட திட்டத்தின்படி, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஆதரவாக உறுப்பினர்கள் வாக்களிக்க வர முடியாத நிலையில், தாங்கள் அதிகாரம் அளிக்கும் மாற்று நபர் மூலம் வாக்களிக்க முடியும்.
இந்த சட்டப் பிரிவை மாற்றக்கோரி பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை ஐகோர்ட்டில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்பான வழக்கு ஒன்றில் மாற்று நபர் வாக்களிக்க அனுமதிக்கத்தக்கதல்ல என லோதா குழு அறிக்கை அளித்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.
அதே அடிப்படையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தேர்தலில் மாற்று நபர் வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து, தேர்தல் பார்வையாளர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.