ஜெய்ப்பூர்,

ஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு காரணமாக கைது செய்யப்பட்டவர்களில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ந்தேதி  அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு  சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்நத வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதில் சுனில் ஜோஷி, பாவேஷ், தேவேந்திர குப்தா ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப் பட்டது. சுவாமி அசீமானந்த் என்பவர்  வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

2007ம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு ஜெய்ப்பூர் சிறப்பு நிதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் இன்று சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இந்த குண்டுவெடிப்பு காரணமாக இந்துமுன்னணி அமைப்பை சேர்ந்த சுனில்ஜோஷி,  தேவேந்திர குப்தா, பவேஷ்பாய் பட்டேல் ஆகியோர் கது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது வந்தது.

இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில்,  குண்டு வைத்ததாக சுனில் மற்றும் குப்தா ஆகியோரை குற்றவாளி என்றும், பவேஷ் குண்டு வெடிக்க திட்டம் தீட்டிய குற்றவாளி என்றும் கோர்ட்டு கூறியுள்ளது.

இந்த வழக்கில் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.  அசிமானந்தர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

குற்றவாளிகளான தேவேந்திர குப்தா மற்றும் பவேஷ்பாய் பட்டேல் ஆகியோருக்கு கிரிமினல் சட்ட பிரிவுகளின்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது. 10 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

சுனில் ஜோஷி எனப்படும் இந்துத்வா தலைவர், மத்திய பிரதேசம் பகுதியில் உள்ள சுனா காதன் என்ற இடத்தில் பதுங்கி இருந்தார். அங்கு நடைபயிற்சிக்கு சென்றபோது, 2007ம் ஆண்டு டிசம்பர் 29ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.