லண்டன்:

3 பேரது டிஎன்ஏ.க்களை பயன்படுத்தி குழந்தை உருவாக்க பிரிட்டன் நியூ கேஸ்டில் பல்கலைக்கழகத்துக்கு அந்நாட்டில் கருவுறுதல் ஒழுங்குமுறை அமைப்பு உரிமம் வழங்கியுள்ளது.

குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தை பெற்றெடுக்க மருத்துவ ரீதியிலான ஆராய்ச்சிகள் வெற்றி கண்டுள்ளது. மனைவியின் கருமுட்டை, கணவரின் விந்தணுக்கள் இணைக்கப்பட்டு குழந்தை பிறக்கச் செய்யப்பட்டது. இது தவிர டெஸ்ட் டியூப் பேபி, வாடகை தாய் என பல முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளது.

தற்போது 3 பேர், அதாவது தாய், தந்தை, மற்றொரு நன்கொடையாளர் என 3 பேரை இணைத்து குழந்தை பெறும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த முயற்சிக்கு பிரிட்டனில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக பெண்ணிடம் இருந்து மரபணு நோய் தொற்று குழந்தைக்கு வராமல் தடுக்கும் வகையிலான எச்சரிக்கை பயன்பாட்டுக்கு கடந்த டிசம்பரில் பிரிட்டன் அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் குழந்தையை உருவாக்கியதாக அமெரிக்க டாக்டர்கள் கடந்த ஆண்டு அறிவித்தனர். ஆனால் இதற்கு அமெரிக்காவில் அங்கிகாரம் கிடைக்கவில்லை. எனினும் இந்த முயற்சியில் நான்கு முறை கருச்சிதைவும், இரண்டு குழந்தைகளும் இறந்தும் விட்டன. ஒன்று 6 வயதிலும், மற்றொன்று 8 மாதத்திலும் இறந்தன.

சுழல் அணு பரிமாற்ற முறையில் தாய்க்கு, நன்கொடையாளர் கருமுட்டைகள் மாற்றம் செய்யப்பட்டு அணு பிரிக்கப்படும் முறை இதில் பின்பற்றப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் அணு டிஎன்ஏ கருமுட்டைகள் மற்றும் நன்கொடையாளர் டிஎன்ஏ பின்னர் தந்தை விந்தணுக்களுடன் சேர்க்கப்பட்டது. அதாவது தாய், கருமுட்டை நன்கொடையாளர் மற்றும் தந்தை ஆகிய 3 பெற்றோரது மரபணு மூலம் இது உருவாக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்துக்கு தேவைப்படும் டிஎன்ஏ கிட்டத்தட்ட ஒரே அளவுதான். ஆனால், டிஎன்ஏ மட்டும் 3 பேரிடம் இருந்து எடுக்கப்படுகிறது. முன்னதாக இந்த திட்டத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பொது விவாதம் நடத்தப்பட்டது. மத ரீதியாகவும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தது என்று பல்கலைக்கழக டாக்டர்கள் தெரிவித்தனர்.