சென்னை,

ன்று காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

அதையடுத்து, நிதிஅமைச்சரை பட்ஜெட் வாசிக்க சபாநாயகர் அழைத்தார்.

தொடர்ந்து தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் உரை வாசிக்க தொடங்கினார். அப்போது மறைந்த ஜெயலலிதா மற்றும் சிறையில் இருக்கும் ஜெயலலிதா, டிடிவி தினகரன் குறித்து பேசினார்.

அதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.

அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, குற்றம்சாட்டப்பட்டு,  தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்களை எப்படி சபையில் கூறலாம் என்றும், அதை உடனடியாக சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினார்.

அதற்கு செங்கோட்டையன்  பதில் அளித்தார். அதைத்தொடர்ந்தும் அமளி நடைபெற்றது. தொடர்ந்து நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.