லக்னோ,
பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த உ.பி.,யின் முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பியில் சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாதிபதி. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அந்த வழக்கில் குற்றம் நிரூபணமானதால் அவரை கைது செய்ய போலீசார் முயன்றனர்.

ஆனால், அவர் போலிசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கடந்த பிப்ரவரி 27ந்தேதி தலைமறைவானார்.

இதற்கிடையில் உ.பியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று விட்டார். ஆனால் என்ன செய்வது, அவரால் வெற்றியை கொண்டாட முடியவில்லை.

இந்நிலையில், வெற்றியை கொண்டாட, வெளியே வந்த அவரை லக்னோவில்,  இன்று காலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த தகவலை ஏடிஜி தல்ஜீப் சிங்கும் உறுதி செய்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

[youtube-feed feed=1]