கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதிக இடங்களை பிடித்த கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
கோவா காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் சிறப்பு அமர்வு நாளை இந்த வழக்கை விசாரிக்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் கூறியுள்ளா