கோவை:

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

வடகோவை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதேபோல் திருப்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஈரோட்டிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டும் தடுப்பணையால் ஈரோடு, கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் என ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.