டெல்லி, 

த்தரபிரதேச  மாநில சட்டசபை  தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்துவருகிறது. இதில் பா.ஜ.க அமோகமாக   வெற்றி பெறவாய்ப்பு அதிகமுள்ளது.  இந்த் தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் யார் என பா.ஜ.க யார் என்று  அறிவிக்கவில்லை.

தேர்தல் முடிவுக்குப் பிறகே முதலமைச்சர் யார் என்று அறிவிக்கப்படும் என அக்கட்சித் தலைவர்கள் கூறினார்கள். தற்போது அந்தமாநிலத்தில் முடிவுகள் வெளியாகி வருகிறது. பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

அதனால் அக்கட்சியினர் இடையே முதலமைச்சர் பதவிக்கு போட்டி தொடங்கிவிட்டது. போட்டியில் 5 பேர் களத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கேசவ் மயூரா, யோகி அதியானந்த், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் மகேஷ் சர்மா, கல்ராஜ் மிஸ்ரா மற்றும் மத்திய அமைச்சர்உமாபாரதி ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் ஒருவர்தான் முதலமைச்சர் பொறுப்புக்கு வரவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.