ராமேஸ்வரம்:

லங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய கடல் எல்லைக்குள் தனுஷ்கோடி அருகே, தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராமேஸ்வரம் தீவு தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்சோ (22) என்பவர் பலியானார்.

இது மீனவர்களிடையே மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரிட்ஜோவின் உடலுக்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உள்ள மீனவர் பிரிட்ஜோவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  பிரிட்ஜோவின் குடும்பத்தாரையும் சந்தித்து  ஆறுதல் கூறினார். அத்துடன்,