டில்லி:
இன்று 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை யின்போது எந்தவித தில்லுமுல்லுகளும் நடைபெறாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஜைதி தெரிவித்து உள்ளார்.
5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி கூறியிருப்பதாவது,
உ.பி. சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்க இருப்பதையொட்டி அங்கு, ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், சட்டம்,ஒழுங்கை பாதுகாக்க மொத்தம் 188 மத்திய கம்பெனி பாதுகாப்புபடைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
தில்லு முல்லுகளை தடுக்க ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுஎண்ணிக்கை மையங்களில் கூடுதலாக சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு நேர்மையான முறையில் ஒட்டு எண்ணிக்கை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தலைமை தேர்தல் கமிஷனர் ஜைதி கூறினார்.