லக்னோ,

டைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு இன்று எண்ணப்படுகிறது. ஐந்து மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கப்போது யார் என்பது இன்று மதியத்திற்கு தெரியவரும்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தர்காண்ட், மணிப்பூர்  உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த ஒரு சில மணி நேரத்திலேயே எந்தெந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றப் போகிறது என்பது தெரிந்து விடும்.

நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்  உத்தரப்பிரதேசத்தில் பாரதியஜனதா ஆட்சியை பிடிக்குமா? அல்லது சமாஜ்வாதி காங்.கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெற்றது. உ.பி.யில் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது.

உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், ஆளும் சமாஜ்வாடி 298 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 105 இடங்களிலும் போட்டியிட்டன. பா.ஜ கட்சி 384 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 403 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

5 மாநில தேர்தலிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கு கிறது. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உ.பி.யில் மட்டும் 20,000 மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான விதிமுறைகளை விதித்து உள்ளது. மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் மத்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.