டில்லி,

ட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகாலம் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை  விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாதது ஏன்?  என்று பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

செல்வந்தர்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

உ.பி.யில் வரும் 8ந்தேதி நடைபெற இருக்கும் இறுதி கட்ட தேர்தலை முன்னிட்டு அங்கு அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உ.பி. முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து, அகிலேஷ் யாதவும், ராகுலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று  சோனபத்ரா என்ற பகுதியில் பொதுமக்களிடையே  பேசிய ராகுல்காந்தி, பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றார் மோடி. ஆனால், அவரது வாக்குறுதி பொய்யானது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள ஐம்பது பெரும் செல்வந்தர்களின், ஒரு லட்சத்து 40 கோடி ரூபாய் மதிப்புடைய வங்கிக் கடன்கள்ளை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது என்றும்,

ஆனால்,  ஏழை விவசாயிகளின் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்யாததால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட தாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

மேலும்,  மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பத்துநாட்களுக்குள் விவசாயிகளின் 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மோடி அரசு பதவியேற்று இரண்டரை ஆண்டுகளாகிவிட்ட நிலையில் விவசாயி களின் குறை தீர்க்கவும், பல லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் எந்த ஒரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.