டெல்லி:

விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இழப்பீடு வழங்குவதால் மட்டும் விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வாகாது என்றும்குற்றஞ்சாட்டியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, உள்ளிட்ட தென்மாநிலங்களில் மட்டுமல்லாது வட இந்தியாவிலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு தரப்படும் இழப்பீட்டை முறைப்படுத்தகோரி தனியார் அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இன்று விசாரணைக்கு வந்த

இந்த வழக்கில், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுத்து தடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மட்டுமே தீர்வல்ல என்றும் கூறியது. இதையடுத்து 2 வாரகாலம் மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து வழக்கை இந்தமாதம் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.