கொழும்பு:
“மக்களுக்கு கழிப்பறைகளைகூட அமைத்துத்தர முடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழம் குறித்து பேசுவதா” என்று இலங்கை சுதந்திரக் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய மத்திய அரசை கோரினார்.
இது குறித்து இலங்கை அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சாந்த பண்டார இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், “தமிழகத்தில் வாக்குகளைப் பெறுவததற்காக அங்குள்ள அரசியல்வாதிகள் இலங்கையை அடகு வைக்க நினைக்கிறார்கள். இது தவறு.
இதற்கு பதிலாக, தங்களுக்கு வாக்களித்த தமிழக அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கட்டும். அந்த மக்களுக்கு கழிப்பறைகளைக்கூட அமைத்துக் கொடுக்க முடியாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இலங்கையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவது முறையல்ல. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று அவர் தெரிவித்தார்.