சென்னை,

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ந்தேதி  அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் தற்காலிரக  பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பொதுச்செயலாளராக  பதவி ஏற்றார்.

அதன்பிறகு நடைபெற்ற குழப்பம் காரணமாக அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தார். அவருக்கு ஆதரவாக அவைத்தலைவர் மதுசூதனன் உள்பட ஒருசிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அதிமுகவின் முன்னாள் உறுப்பினராக சசிகலா எம்.பி இந்திய தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்திருந்தார்.

மேலும், அதிமுகவின் ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேய்ன்  தலைமையில் 10க்கும் மேற்பட்ட எம்பிக்கள் மற்றும் பிஎச் பாண்டியன் உள்ளிட்டோர் டில்லி சென்று தேர்தல் கமிஷனரை சந்தித்து புகார் கூறினார்.

அப்போது, அதிமுக சட்ட விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி கிடையாது என்பதால், ஆகவே சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி வலியுறுத்தினர்.

இந்நிலையில், சசிகலா, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஆனது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு சசிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரபப்பன அக்ரஹார சிறைச்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சிறைச்சாலை சூப்பரிடண்ட்டுக்கு வந்த அந்த கடிதம் ஜெயிலில் இருக்கும் சசிகலாவிடம் வழங்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.