சென்னை:

சட்டசபையில் தங்கள் மீது தாக்குதல் நடந்தாதக, ஆளுநரிடம் புகார் அளிக்க வந்த திமு.க. எம்.எல்.ஏக்கள், ஆளுநர் மாளிகை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பது நடப்பதாக அறிவித்தது.

இன்று காலை சபை கூடியவுடன், திமுக, காங்கரிஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் அனைவகும். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்தார் சபாநாயகர் தனபால். இதனால் அவரது இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் முன்பு இருக்கும் மேஜை உடைக்கப்பட்டு தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. புத்தகங்கள் கிழித்து எறியப்பட்டன. சட்டபேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டது. சபாநாயகர் இருக்கை மீது திமுக எம்எல்ஏ ரெங்கநாதன் அமர்ந்தார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் முன்பு இருக்கும் மைக்குள் வீசி எறியப்பட்டன. தி.மு.க. எம்எல்ஏ பூங்கோதை, எழும்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் இருக்கை மீது ஏறி நின்று முழக்கமிட்டனர்.

இதன் பிறகு சபையை ஒத்தி வைத்த சபாநாயகர் தனபால், மூன்று மணிக்கு கூட்டம் துவங்கும் என்று அறிவித்தார்.

இதற்கிடையே திடீரென சபைக்குள் புகுந்த காவலர்கள் தங்களை தாக்கியதாக திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் புகார் தெரிவித்தார். தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தெரிவிதார்.

பிறகு இந்த தாக்குதல் குறித்து ஆளுநர் வித்யாசாகரிடம் புகார் அளிக்கப்போவதாககூறி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கிளம்பினர்.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுக எம்.எல்.ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.