மிழக சட்டசபையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று(சனிக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள், சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள நட்சத்திரவிடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அங்கு வலுக்கட்டாயமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக பலரும் புகார் தெரிவித்துள்ளனர். தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட துக்க நிகழ்ச்சிக்குக்கூட இரு எம்.எல்.ஏக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் அவர்களில் சிலர், தாங்கள் சுய விருப்பத்துடனேயே தங்கயிருப்பதாக தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும், இன்று (பிப்ரவரி 18) காலை அங்கிருந்து கோட்டைக்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட உள்ளனர்.

ஏற்கெனவே இந்த எம்.எல்.ஏக்கள், புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு வந்தபோது வழியில் மக்கள் வசைபாடினர். ஆகவே தற்போது கூவத்துாரில் இருந்து கோட்டை வரை, 1,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கோட்டையிலும், கோட்டையை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காமராஜர் சாலையில், வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.