சென்னை,
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளார்.
இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட சசிகலா ஓபிஎஸ், மதுசூதன், மா.பா.பாண்டியன், பொன்னையன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார்.
பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக அவர் ஜெயிலுக்கு சென்றுள்ளதால், புதிய துணைப்பொதுச் செயலா ளராக ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்து பதவி கொடுத்தார்.
இந்நிலையில்,டி.டி.வி. தினகரன் டாக்டர் வெங்கேடஷ் ஆகியோரை கட்சியில் சேர்த்தது ரத்து தவறு என்றும், இதையடுத்து, சசிகலா, டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்குவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார்.
அவைத் தலைவர் என்ற அடிப்படையில், அவர்களை அ.தி.மு.க. சட்ட விதிகளுக்குட்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.