அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆகவே அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இந்த நிலையில் தனது சார்பாக யாரை முதல்வராக்குவது என்று இன்று காலை முதல் ஆலோசனை செய்துவந்தார். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.
இந்த நிலையில், தனது அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா முடிவெடுத்து அறிவித்துள்ளார்.