மும்பை:
அமெரிக்க கடற்படை கப்பல்களை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ்’ என்ற இந்திய நிறுவனம் அமெரிக்காவின் 7வது கடற்படையுடன் வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடற்படைக்கு சொந்தமான 100 கப்பல்களை பழுது நீக்குதல், சர்வீஸ் செய்தல், பராமரிப்பு செய்தல் பே £ன்றவற்றை ‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ்’ நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
சுமார் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இது இந்தியாவு க்கும், ‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ்’ நிறுவனத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம். இந்திய துறைமுகங்களில் வைத்து அமெரிக்க கப்பல்களை பழுது நீக்கும் வாய்ப்பை பெற்ற ஒரே இந்திய நிறுவனமாக ‘ரிலையன்ஸ் டிஃபன்ஸ்’ திகழ்கிறது.
இதற்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் அல்லது ஆசியாவில் உள்ள இதர நாடுகளில் கப்பல்கள் பராமரிக்கப்படவுள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் நீரில் நீந்தி இந்த கப்பல்கள் குஜராத் மாநிலம் பிபாவாவ் துறைமுகத்தில் பராமரிப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.