டெல்லி:
தமிழக முதல்வர் பன்னரீசெல்வம் ராஜினமாக செய்துள்ள நிலையிலும், தனக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வேண்டும் என்று கோரியுள்ளார். அதே சமயம் தனக்கு தான் பெரும்பான்மையான எம்எல்ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என்று சசிகலா கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த விஷயத்தில் முடிவு எடுப்பது தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இ ந்த விவகாரத்தில் எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் மூலம் 356வது சட்டப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுவதே சிறந்த தீர்வாகும் என கருத்துக்கள் நிலவுகிறது.
இதன் விபரம்….
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள 356வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை கலைக்கும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு வரையறைகளை நிர்ணயம் செய்து வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்பு இந்த பிரிவு தன்னிச்சையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் கர்நாடகா, மேகாலயா, நாகாலாந்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதித்துள்ளது.
கடந்த 1988ம் ஆண்டு கர்நாடகாவில் ஜனதா தள ஆட்சி நடந்து வந்தது. மொலாக்ரே என்ற எம்எல்ஏ அம்மாநில கவர்னருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அவர் மற்றும் 19 எம்எல்ஏ.க்கள் எஸ்.ஆர். பொம்மை அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தனர். இதனால் மாநில அரசில் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி கலைக்கப்ட்டது.
அதேபோல் 1991ம் ஆண்டு மெகாலயா அரசுக்கு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக குடியரசு தலைவர் டிஸ்மிஸ் செய்யும் உத்தரவை பிரகடனம் செய்தார். இதன் பிறகு ஆட்சி கவிழ்ந்தது. 1988ம் ஆண்டு நாகாலாந்து கவர்னரின் அறிக்கை அடிப்படையில் அம்மாநில அரசு கலைக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பாஜ ஆட்சி செய்த மத்தியபிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது.
இது போன்ற 356வது பிரிவு அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டது, இதைத் தொடர்ந்து இந்த சட்டத்தில் அரசியலமைப்பு வரையறையை நிர்ணயம் செய்ய 9 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நீண்ட விவாதங்கள், ஆலோசனைகளுக்கு பிறகு மத்திய அரசின் அதிகார வரம்புக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டது.
முதலில் ஒரு அரசு சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அதன் பிறகு இரண்டாவது வாய்ப்பாக நீதிமன்றம் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, அரசு கலைக்கப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். மூன்றாவதாக ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயலிழந்தால் அங்குள்ள அரசை குடியரசு தலைவர் கலைக்க நிபந்தனையற்ற அதிகாரம் வழங்கப்பட் டுள்ளது.
மேலும், இந்த சட்டத்தில் ஆட்சிக்கு ஆதாயம் தேடும் வகையில் மதசார்பற்றதன்மைக்கு எதிராக செயல்படும் ஒரு கட்சியின் அரசு செயல்படும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சில சரத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் 356வது பிரிவு பயன்படுத்த சட்டத்தில் இடம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் பாபர் மசூதி இடிப்பின் போது நடவடிக்கை எ டுக்கப்பட்டது.
எஸ்.ஆர். பொம்பை வழக்கில் தீர்ப்பு கூறியது போல் சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்க தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக.வு க்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஹரிஷ் ராவத் தலைமையில் உத்தரகாண்டில் நடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு இத்தகைய வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.