டில்லி,

யர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதீன நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உள்ளது உச்சநீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வகித்த கர்ணன்,  தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுகிறார். இவர்,  உயர் மற்றும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் குறித்து புகார் தெரிவித்து  பிரதமர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதி  உச்சநீதிமன்றம் தானே வழக்கு பதிந்தது. இன்று (பிப்ரவரி 13) உச்சநீதிமன்றத்தில் கர்ரணன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் கர்ணன் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.