சென்னை:

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசிவருகிறது. எனினும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சசிகலா வசம் உள்ளனர்.

 

இது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. எம்.எல்.ஏ.க்களின் இந்த செயலுக்கு மாற்று வழியில் மூலம் எதிர்ப்பை தெரிவிக்கும் ஆலோசனை ஒன்று சமூக வளைதளங்களில் பரவியது.

தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ.க்களின் செல்போன், லேண்ட் லைன் போன், வீட்டு முகவரி, அலுவலக முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அடங்கிய பட்டியல் சமூக வளைதளங்கில் வைரலாக பரவியது. இதில் ‘‘உங்களது எம்எல்ஏ.வை தொடர்பு கொண்டு தங்களது கருத்தை பதிவு செய்யுங்கள்’’ என்று தகவலும் அளிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ.க்களுக்கு போன் கால்கள் பறந்த வண்ணம் உள்ளது. இதில் பெரும்பாலான அழைப்புகள் ஓபிஎஸ்.க்கு ஆதரவு அளிக்குமாறு வந்துள்ளது. இந்த எம்எல்ஏக்கள் அனைவரும் தற்போது சசிகலா கஸ்டடியில் உள்ளனர்.

இவ்வாறு அழைப்புகள் வந்ததை கண்டு பலர் தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்துள்ளனர். இதில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் எரிச்சலடைந்து தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அவர் டுவிட்டர் பக்கத்தில்….
‘‘அதிமுக எம்.எல்.ஏ.க்களை போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் துன்புறுத்தப்படுவது எத்தகைய நெறிமுறை. எங்களது சுதந்திரத்திற்கு எங்களது உரிமை உள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கும் கண்டனங்கள் தற்போது எழுந்து வருகிறது. அவரது டுவிட்டர் பக்கம் பேஸ்புக், வாட்ஸ் அப்களில் பரப்பப்பட்டு வருகிறது. தற்போது மாபா பாண்டியராஜன் சமூக வளைதளங்கில் கிழித்து தொங்கவிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.