சென்னை:
நியூஸ் 18 செய்தி சேனலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:
பன்னீர்செல்வத்தை திமுகவினர்அதிமுக முதல் அமைச்சர் என்றே நினைக்கவில்லை. அதனால் தான் நாங்கள் ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளனர். அதனால் அவர்கள் தான் பன்னீர்செல்வம் பின்னால் இருப்பது உறுதியாகிறது.. நாங்கள் இருக்கிறோம் என்று திமுகவினர் தெரிவித்த பிறகு தான் என்னை முதல் அமைச்சராக வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தினர்.
பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தை பார்த்தாலே இது புரியும். சட்டமன்றத்தில் ஜெயலலிதா செயல்பட்டது போல் நான் செயல்படுவேன். காரசாரமான எதிர்கட்சியாக தான் திமுக இருக்கும். இணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழக மக்களின் பிரச்னையை தீர்க்க நாங்கள் இருக்கிறோம்.
அவர்கள் எதற்கு. எங்களுக்கு தேவையே இல்லை.
அதிமுக தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்துள்ளது. காவிரி விவகாரம், கச்சத்தீவு, கெயில் உள்ளிட்ட மக்களுக்கு விரோதமான செயல்களையே திமுகவினர் அவர்களது ஆட்சியில் செய்துள்ளனர் என்று ஜெயலலிதா என்னிடம் அடிக்கடி தெரிவித்துள்ளார். மக்களுக்கு விரோதமான திமுகவுடன் எப்படி தோழமையாக இருக்க முடியும். எங்கள் பார்வை வேறு. இணக்கம் வேண்டியதே இல்லை. நாங்கள் செய்துவிடுவோம் இவர்கள் எதற்கு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.