வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம், நாட்டில் உள்ள தனியார் பயிற்சி மையங்களைச் சீராக்க வேண்டும் என்றும் ஏனெனில் அவைகளை முற்றிலுமாக அழிக்க முடியாது என்றும், அதற்காகச் சட்ட வழிமுறைகளை உருவாக்குமாறும் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்திய மாணவர் சங்கம் (SFI), CPI (M) யின் மாணவர்கள் முன்னனி, கல்வி உரிமை (RTE) வழிமுறைகளை மீறும் “அங்கீகரிக்கப்படாத” தனியார் பயிற்சி நிறுவனங்கள் திடீரென்று காளான்கள் போல முளைப்பது பற்றித் தாக்கல் செய்த பொது நல வழக்கை நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் உள்ளடக்கிய நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கான நுழைவு தேர்வை முற்றிலுமாக தள்ளுபடி செய்துவிட முடியாது, மற்றும் அரசாங்கம் அதன் உறுதிச் சான்றில் பள்ளிக்கூட தகுதி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் கூறியுள்ளது. மனுதாரரின் சட்ட ஆலோசகர் ராஜஸ்தானில் உள்ள பயிற்சி மையங்கள் பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்த போது, நீதிமன்ற அமர்வு, “நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும் நீங்கள் நினைக்கிறீர்கள்? எல்லா இடத்திலும் பயிற்சி மையங்கள் உள்ளன. அவை அனைத்தும் முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும் என்று உங்களால் கூற முடியாது. ஆம், அவை சீர் படுத்தப்படும், மற்றும் அரசு அதற்கான வழிமுறைகளை வகுக்கும். ” “இந்திய யூனியன் தகுதி தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்கிறது. பல்வேறு கல்வி குழுக்கள் உள்ளன. நுழைவுத் தேர்வின் தேவை என்பது நம்மால் நிராகரிக்கக் கூடியது அல்ல,” என்று நீதிமன்றம் மனுதாரரிடம் கூறியது. “நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அனைத்து பயிற்சி மையங்களையும் மூட வேண்டுமா என்ன? அதைச் செய்ய முடியாது,” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுதாரர் பயிற்சி மையங்களின் வர்த்தக நோக்கைப் பற்றி கேள்வி எழுப்பிய போது, நீதிமன்றம், “பயிற்சி மையங்கள் ஈட்டும் வருவாயைப் பற்றி நீங்கள் கவலை கொள்கிறீர்களா?” என்று கேட்டது. 2014 ஆம் ஆண்டில், மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்திடம், “அங்கீகரிக்கப்படாத” தனியார் பயிற்சி நிறுவனங்கள் உருவாவதை மாநில அரசுகள் தான் சரிபார்க்க வேண்டும் என்று தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் இதற்குமுன்னர் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இது பற்றிக் கேட்ட போது, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் “தரத்தை ஒருங்கிணைப்பது மற்றும் நிர்ணயம் செய்வது” மட்டுமே தனது கடமை என்று கூறி ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்தது. SFI கொடுத்த மனு, இந்தியா முழுவதும் உள்ள “அங்கீகரிக்கப்படாத” தனியார் பயிற்சி நிறுவனங்களின் செயல்பாட்டை, பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் விதத்தில் நிறுவனரீதியான முறையில் ஒழுங்கு கட்டுப்படுத்துமாறு மத்திய அரசாங்கத்திற்கு யோசனைக் கொடுத்துள்ளது.
மானவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுகளை, தனியார் பயிற்சி மையங்கள் வியாபாரமாக்குவது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இது போன்றதொரு நிலைமை தமிழகத்தில் தோன்றியபோது, நுழைவுத் தேர்வையே தமிழக அரசு ரத்து செய்தது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது