லண்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டது முதல் தற்போது வரை அவர் அதிரடிக்கே பெயர் பெற்றவராக இருந்து வருகிறார். இந்த வகையில் அவரது உருவத்துடன் ஒத்துப்போகும் ஒரு சிலை ஒன்று இங்கிலாந்தில் உள்ள பழமையான தேவாலயத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபலமாகி வரும் இந்த சிலை குறித்த விபரம்…

 

இங்கிலாந்தின் நாட்டிங்கம்ஷயர் பகுதியில் அமைந்துள்ள சவுத்வெல் மின்ஸ்டர் சர்ச் என்ற 700 ஆண்டு பழமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்துடன் ஒத்துப்போகும் வகையில் உள்ள ஒரு முகம் கல்லில் செதுக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

 

டிரம்பின் பிரத்யே தலை முடி ஸ்டைல் இதில் அப்படியே பிரதிபலிப்பதாக மீடியாக்களில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இந்த சிலை தற்போது மிக பிரபலமாகி வருகிறது.

அந்த ஆலயத்தில் விசித்திரமான மற்றும் நகைப்புக்குறிய சிற்ப முகங்கள் நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுள்ளது. டிரம்ப் அதிபராவதற்கு முன்பே இந்த முகம் அமைந்துள்ளது. எனினும் தற்போது இந்த முக சிலை சமூக வளைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீரா அகமது என்ற பத்திரிக்கையாளர் குடும்பத்தோடு பொழுதை கழிக்க அந்த ஆலயத்துக்கு சென்று சுற்றி பார்த்தபோது இதை போட்டோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இவர் தற்போது பிபிசி ரேடியோவில் முன்னணி தொகுப்பாளராக உள்ளார்.

இவர் கூறுகையில்,‘‘ எனது கணவருக்கு பழங்கால தேவாலயங்கள் மீது ஈடுபாடு அதிகம். அதனால் ஒரு முறை இந்த ஆலயத்தை பார்ப்பதற்காக சென்றோம். அந்த முக சிலையை பார்த்ததும் இது சரியாக இருக்கும் என்று தான் நினைத்தேன். அற்புதமாக இருந்த அந்த சிலை நவீனமயமாக காட்சியளித்தது என்றார்.

14ம் நூற்றாண்டில் 280 அமைச்சர்களில் இந்த முகமும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் 19ம் நூற்றாண்டில் பிளாஸ்டர் வேலைப்பாடுகள் நடந்துள்ளது.

இது குறித்து அந்த ஆலயத்தை சேர்ந்த பாதிரியார் கெனான் நிகேல் கோட்ஸ் கூறுகையில்,‘‘ இந்த முக சிலையை நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஒத்துப்போவதை அறியவில்லை. உண்மையாகவே அவரது முடி அலங்காரத்தை போலவே சிலை உள்ளது.

மன்னர், ராணி, வர்த்தகர் போன்ற வரிசையில் இல்லாமல் அடிமட்டத்தில் இருந்தவர்களின் சிலை பகுதியில் இது இடம்பெற்றுள்ளது. அதனால் அந்த நபர் மன்னராக இருந்திருக்க வாய்ப்பு இல்லை’’ என்றார்.