டில்லி:
டில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
குடியரசு தலைவர் அலுவலக கணக்குப்பிரவு கட்டிடத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சில நிமிடங்களில் தீயை அணைத்தனர்.
நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால், அங்கிருந்த சோபா, சேர், நாற்காலி, கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக எந்த துறை ஆவணங்கள் எரிந்து நாசமானது என்று அறிவிக்கப்படவில்லை.