பனாஜி,
கோவா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மாற்று கட்சிகளிடம் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என்று மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியிருந்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, விதிகளை மீறி பேசியதாக மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பிப்ரவரி 4 ம் தேதி கோவைவில் சட்டசபை தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பிரசாரம் ஜனவரி 29ந்தேதி பிரசாரம் செய்தார்.
அப்போது, ” தேர்தலின் போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுங்கள். மற்ற கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள் ” என கூறி உள்ளார். மத்திய அமைச்சர் ஒருவரே மக்களை பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
மனோகர் பாரிக்கரின் இந்த பேச்சு தேர்தல் விதிகளை மீறுவதாக உள்ளதாக கூறி, தேர்தல் கமிஷன் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், நாளை ( பிப்ரவரி 3ந் தேதி) பிற்பகலுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.