கோட்டயம்,

ல்லூரி வளாகத்திலேயே மருத்துவ மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், கோட்டையத்தில் உள்ள  மருத்துவப் படிப்புகளுக்கான கல்லூரியில் ஆலப்புழாவை பகுதியைச் சேர்ந்த லெட்சுமி என்ற மாணவி பிசியோதெரபி படித்து வந்தார்.

சம்பவத்தன்று  கல்லூரி வளாகத்தில் லெட்சுமியுடன் இளைஞர் ஒருவர் கடுமையான வாக்கு வாதம் செய்தார். அதைத்தொடர்ந்து திடீரென தான் கையில் எடுத்து வந்திருந்த பெட்ரோலை லெட்சுமி மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளான்.

இதையறிந்த லெட்சுமி செய்வதறியாது, அருகிலிருந்த நூலகத்திற்குள் ஒடினார். அவரை துரத்திச் சென்ற அந்த இளைஞன் நூலகத்திற்குள்ளேயே லெட்சுமி மீது தீயை வைத்துள்ளான். அத்துடன் தனது உடல்மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டான்.

இதையறிந்த கல்லூரி நிர்வாகம் தீயினால் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் காதலர்கள் என தெரிய வந்தது.

லெட்சுமி மீது தீ வைத்துக்கொண்டு தானும் தீக்குளித்தவர் பெயர்  ஆதர்ஷ் என்பது தெரிய வந்தது. அவர், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர். லெட்சுமியும், ஆதர்ஷ்சும் ஏற்கனவே காதலித்து வந்துள்ளனர்.

சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால்,லெட்சுமி காதலன் ஆதர்ஷை சந்திக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்ட கோபத்தில் ஆதர்ஷ்,  லெட்சுமியை எரித்துவிட்டு தானும் சேர்ந்து எரிந்துபோனார்.