டில்லி:
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பொதுபட்ஜெட்டில் அமைந்துள்ள முக்கிய விவரங்கள் துறை வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கல்வி, வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு, ரெயில்வே, சாலை போக்குவரத்து போன்ற துறைகளுக்கான ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம்.
நிதித்துறை:
- பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.
- பொருளாதார நிதித்தன்மை நமது மிகப் பெரிய வெற்றி.
- வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது.
- வெளிநாட்டு முதலீடு 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பணவீக்கம் விலை உயர்வு கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கின்றனர்
- அரசின் முயற்சிக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்
- கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
- உலக பொருளாதாரம் இருண்டிருக்கும் சூழலில் இந்தியா பிரகாசிக்கிறது
- பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- இளைஞர் நலன் வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது
- உலகின் 6வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது
- அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
- பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட வெகுசில நாடுகளில் இந்தியாவும் உள்ளது
- மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் அரசு உள்ளது
- ஜிஎஸ்டி வரிமுறையை அமல்படுத்துவதற்கான அரசமைப்பு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
- ஜி.எஸ்.டி.,யில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி
- கச்சா எண்ணெய் நிலையில் நிலையற்ற தன்மை சவாலாக உள்ளது
நிதி பற்றாக்குறை:
- இந்த வருடத்திற்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.21.47 லட்சம் கோடியாக இருக்கும்
- நிதி பற்றாக்குறை,மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்ஒ
- ஓட்டுமொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரிப்பு
கிராமப்புற திட்டங்கள்
- பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.8000 கோடி
- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு கோடி குடும்பங்களை பாதுகாக்க புதிய திட்டம்
- மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.48,000 கோடி
- கிராமப்புற சாலைகளை தரம் உயர்த்த இலக்கு நிர்ணயம்
- சதக் யோஜனா திட்டத்திற்கு ரூ.19,000 கோடி
- 2018 மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீதம் மின் வசதி
- 2019 க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
- கிராமப்புறங்களில் நாள் ஒன்றிற்கு 133 கி.மீ.,க்கு சாலை அமைக்கப்படும்.
- கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த 1,17,000 கோடி கடந்த ஆண்டு 87,765 கோடி
- 2018 மே 1ம் தேதிக்குள் அனைத்த கிராமங்களுக்கும் மின்சாரம்
- கிராமபுறங்களில் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்
- கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைப்பு
- 2017- 18ல் 5 லட்சம் குளங்கள் கட்டப்படும்
வறுமை ஒழிப்பு:
- 1 கோடி குடும்பம் வறுமை நிலையிலிருந்து மீட்கப்படுவார்கள்
- கட்டமைப்பு கிராமப்புற வளர்ச்சி வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம்
- கிராமபுரங்களில் நாள்தோறும் 133 கி.மீ.,தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டது.
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி.
- வீடு இல்லாதவர்களுக்காக 2019க்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்
- பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி
- 100 நாள் வேலை திட்டத்தில் பெண்களின் பங்களிப்ப 55 சதவீதம் உயர்வு
- பால் பொருட்களை பதப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு நிதிக்கு ரூ. 8 ஆயிரம் கோடி
கல்வித்துறை…
- பள்ளிகளில் அறிவியல் கல்வி மேம்படுத்தப்படும்.
- வரும் ஆண்டின் ஆன்லைன் மூலம் 350 படிப்புக்கள்
- மருத்துவ மேற்படிப்பில் 25,000 புதிய இடங்கள்
- நாடு முழுவதும் 100 திறன் வளர்ச்சி மையங்கள்.
- மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில்புதிய பாட திட்டங்கள் கொண்டு வரப்படும்.
- உயர்கல்வித்துறையின் பல்கலைக்கழக மானிய குழுவில் மாற்றம்
- கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு தன்னாட்சி
- அனைத்த உயர் கல்வி தேர்வுகளையும் சிபிஎஸ்இ நடத்தாது
மருத்துவம்:
- 1.5 லட்சம் சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்
- உயிர் காக்கும் கருவிகள், மருந்துகளின் விலையை குறைக்க திட்டம்
- மருத்துவ உபகரணங்கள் விலை குறைக்க நடவடிக்கை
- 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு
- மருத்துவ சாதனங்கள் விலையை குறைக்க நடவடிக்கை
- குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள்
- 1.5 லட்சம் சுகாதார துணை மையங்கள் சுகாதார நல் மையங்களாக மாற்றப்படும
- பெண்கள், குழந்தைகள் திட்டங்களுக்கு ரூ.1,84,000 கோடி
- தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.52,393 கோடி
- சங்கல்ப் திட்டத்தின் கீழ் 3.5 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி
- இளைஞர்கள், அறிவியலில், கவனம் செலுத்த சிறப்பு நிதி
மூத்த குடிமக்களுக்கு:
- மூத்த குடிமக்களுக்கு ஆதார் கார்டு அடிப்படையில் உடல் நல அட்டை
- 8 சதவீதம் உறுதியான வருவாயுடன் எல்ஐசியில் திட்டம்
- நாட்டை விட்டு தப்பிய குற்றவாளிகள் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புது சட்டம் கொண்டு வரப்படும்.
- சிட்பண்டு மோசடிகளை தடுக்க புது சட்டம் இயற்றப்படும்.
- வங்கிகளின் மூலதன மறுசீரமைப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி
ராணுவத்திற்கு:
- பாதுகாப்பு துறைக்கு பென்சன் செலவு தவிர்த்து 2.74 லட்சம் கோடி ரூபாய்ஒதுக்கீடு
- மத்திய அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.37,435 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்சிகளுக்கு கட்டுப்பாடு:
- அரசியல் கட்சிகள் ஒருவரிடமிருந்து ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக நன்கொடை பெற முடியும்
- அரசியல் கட்சிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்
- கட்சிகள் செக் மற்றும் மின்னணு முறை மூலமாக நிதி பெற முறை மூலமாகவோ நிதிபெற கட்டுப்பாடில்லை.