டில்லி:

த்திய நிதி பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையுடன், ரெயில்வே பட்ஜெட்டும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்த  2017-18-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு 55ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ரெயில்துறை அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

1. மத்திய அரசின் நிதியில் இருந்து 55 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. 3500 கி.மீட்டர் தூரத்திற்கு புதிய ரெயில் பாதைகள் அமைக்கப்படும்

3. மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரெயில்வே திட்டங்கள் உருவாக்கப்படும்.

4. அகல ரெயில்பாதை தடங்களில் 2020-க்குள் ஆளில்லா ரெயில் கேட் இல்லாத நிலை எட்டப்படும்.

5. ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுக்களுக்கு சேவை வரி ரத்து

6. புதிய மெட்ரோ ரெயில் சட்டம் கொண்டு வரப்படும்.

7. 2019-க்குள் அனைத்து ரெயில்களிலும் பசுமை கழிவறைகள் அமைக்கப்படும்.

8. தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

9. புதிய மெட்ரொ ரெயில் கொள்கை அறிவிக்கப்பட்டு, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

9. ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் பதிவு செய்யப்படும் இ-டிக்கெட்டுகளுக்கான சேவைக்கட்டணம் திரும்பப் பெறப்படும்.

10. ஐ.ஆர்.சி.டி.சி.  பங்கு சந்தையில் ஈடுபடுத்தப்படும்