துபாய் :

விமானத்தில் பயணிகளுக்கு இணையாக பால்கன் பறவைகளும் பயணம் செய்தன. இதற்கு சவுதி இளவரசர் டிக்கெட் எடுத்துள்ளார்.

விமானத்தில் பால்கன் பறவைகள் பயணம் செய்யும் புகைப்படம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பால்கன் பறவைக்கு தமிழில் வல்லூறு என்று பெயர்.
துபாயில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகை இது குறித்த செய்தி வெளியிட்டுள்ளது.

அதில்…

பால்கன் பறவைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய பறவையாகும். சவுதி இளவரசர் இந்த பால்கன் பறவைகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தார்.

அதற்காக விமானத்தில் 80 டிக்கெட்களை இளவரசர் புக் செய்தார். அந்த பறவைகளை விமான பயணிகள் இருக்கையுடன் கட்டி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வழிவகை செய்தார்.
இவ்வவறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் பால்கன் பறவைகளுக்கு தனியாக பசுமை பாஸ்போர்ட்கள் உள்ளது. இந்த பாஸ்போர்ட் மூலம் பால்கன் பறவைகள் கத்தார், சவுதி அரேபியா, பாகிஸ்தான்,, பஹ்ரைன், குவைத், ஓமன், மொனாக்கோ, சிரியா நாடுகளின் வான்பரப்பில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த 80 பால்கன் பறவைகளில் 6 பறவைகள் விமானத்தின் எகனாமி வகுப்பில் பயணம் செய்தது என கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.