சென்னை,
சென்னை தெருக்களில் கழிவுநீரை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சி துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், ரோடுகளில் கழிவு நீர் திறந்துவிடப்பட்டால் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யும் விதத்தில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை தெருக்களில், குடியிருப்புவாசிகள் கழிவு நீரை திறந்து விட்டால், அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்டமுன் வடிவு, தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த சட்டமுன்வடிவில் கூறியிருப்பதாவது,
சென்னை தெருக்களில் குடியிருப்புவாசிகள் கழிவு நீரை திறந்து விட்டால், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
வணிக வளாகங்கள் கழிவு நீரை திறந்து விட்டால், 10 ஆயிரம் ரூபாய் முதல், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.