ஷில்லாங்க்: பாலியல் புகாரில் புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேகாலயா ஆளுநராக 2015-ல் நியமிக்கப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்த சண்முககநாதன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த பிரமுகர்.
மேகாலயா ஆளுநராக இருந்த இவர், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களுக்கு கூடுதல் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 24-ந் தேதியன்று மேகாலயா ராஜ்பவன் மக்கள் செய்தி தொடர்பாளர் பதவிக்கான நேர்காணலுக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக செய்திகள் வெளியாகின. தொடர்ந்து ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோர் 5 பக்க கடிதம் ஒன்றை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பினர்.
அக்கடிதத்தில் 11 விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆளுநர் மாளிகையை பெண்கள் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றியது; சின்மோயி தேகா என்ற பெண்ணுடனான நெருக்கம் உட்படட பல குற்றச்சாட்டுகள் அக்கடிதத்தில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து சண்முகநாதன் ராஜினாமா செய்ய கோரி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில், சண்முகநாதன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளதக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.