டில்லி,
நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த மத்தியஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தியாகிகள் தினமான வரும் 30ந்தேதி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, நாட்டுக் காக உயிர் நீத்த தியாகிகளுக்காக ஜன.30-ல் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நம் நாட்டிற்காக உயிர் நீத்த அனைத்து தியாகிகளையும் இந்த நாளில் நினைவு கொள்வோம். அவர்களது தியாகங்கள் எப்போதும் நம் நினைவில் இருக்கும்.
நமது வீர தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காலை 11 மணி அளவில் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.