நெட்டிசன்:
சமூக ஆர்வலர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அவர்கள், “மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும் ! “ என்ற தலைப்பில் எழுதியுள்ள முகநூல் பதிவு:
“ரஜினிகாந்த் ,சிம்பு , லாரன்ஸ் , . பாலாஜி , நயன்தாரா , விஜய் , சிவகார்த்திகேயன், சமுத்திரக்கனி கவுதமன்… இப்படி நடிகர்கள் இயக்குனர்கள் என திரை நட்சத்திரங்கள் பலர் போராட்டத்தில் அக்கறையோடு அரிதாரம் பூசிகொண்டார்கள் .கோடம்பாக்கம் என்ற புண்ணியஸ்தலத்தில் இருந்தாலே ஆசிர்வாதம் தருகின்றவர்கள் என்று நம்மில் பலர் நம்புகின்னறனர் .இவர்கள் ஏதோ தமிழ்நட்டு மக்களுக்கு தியாகங்களும் , பணிகளும் ஆற்றியவர்கள் போல சிலிர்த்து கொள்கின்றனர் .
கேவலமாக இருக்கின்றது… நாடு எங்கே செல்கிறது?
ரஜினிகாந்த் சம்மந்தமாக ஒரு வேதனையான ஒரு விடயத்தை சொல்ல வேண்டும்.
ரஜினிகாந்த் நதிநீர் பிரச்னையில் அக்கறை கொண்டிருக்கிறார் என்றும், நதி நீர் இணைப்பில் உண்மையில் ஆர்வமாயிருக்கிறார் என்றும் நான் நம்பியிருந்தேன்.
கங்கை ,கிருஷ்ணா , காவிரி ,வைகை , தாமிரபரணி , நெய்யாறோடு தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் போராடி அதற்கு சாதகமான தீர்ப்பை பெற்றிருந்த நேரம். அந்த உத்தரவு நகலை கடிதக் குறிப்புடன் ரஜினிக்கு அனுப்பி வைத்தேன் அத்துடன் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை… நதி நீர் இணைப்பில் அக்கறை கொண்டவர் என்று நம்பி தகவலுக்காக மட்டுமே அவருக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால்… அந்த தீர்ப்பு நகலை கூட பிரித்து படித்து, “ தீர்ப்பு நகல் கிடைத்து” என்று ஒருவரிகூட எழுதவில்லை ரஜினிகாந்த். இவர் எப்படி இதயம் சுத்தியோடு நதிநீர் பிரச்சினையை ஆதரிப்பார்?
இதே தீர்ப்பு நகலை தலைவர் கலைஞரிடமும்,ஏ.பி.ஜே அப்துல் கலாமிடம் 2012ல் வழங்கியபோது தலைவர் கலைஞர் அவர்கள் இது பெரிய விசயம்யா!என்று சொல்லி நதிநீர் இணைப்பு குறித்து அவருடைய அறிக்கையில் என்னை குறிப்பிட்டு இருந்தார் .அப்துல் கலாமோ நீங்கள் நாட்டுக்கு நல்ல பணியைசெய்துள்ளீர்கள் என்று தட்டிக்கொடுத்தார்.
இந்த பெருந்தன்மை ரஜினியிடம் இல்லையே…. அப்படியானால் நதி நீர் இணைப்பு என்பது எல்லாம் வெற்றுப் பேச்சுத்தானா ?.
இத்தனைக்கும் ரஜினி என்னை அறியாதர் அல்ல.
1998ம் ஆண்டு. அவர் நடித்த படையப்பா திரைப்பட ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டார்கள். படம் வெளியாக இரண்டு மூன்று நாட்களே இருக்கின்றன.
படம், தணிக்ககைக்கு (சென்சார்) வருகிறது. அப்போது திரைப்பட தணிக்கைத்துறை உறுப்பினர் .(censor bord member )களில் நானும் ஒருவவன்..
அந்த படம் தணிக்கைக்கு வருகிறது. சகக உறுப்பினர் ஜெயா அருணாசலம் அவர்கள், படையப்பா படத்தை பார்த்துவிட்டு, “நீலாம்பரி பாத்திரமும் வசனமும் ஜெயலலிதாவை குறிப்பதாக இருக்கிறது . அந்த பகுதிகை நீக்க வேண்டும்” என்று கூறினார்.
அப்போது அரசியல் ரீதியாக கொந்தளிப்பு நிலவிய காலகட்டம் வேறு. ஆனால் ஜெயா அருணாசலம் அவர்களின் கருத்தை நான் கடுமையான குரலில் ஆட்சேபித்தேன். இதனால், சென்சார் அதிகாரியும் அந்த காட்சிகள் நீக்க தேவையில்லை என்று கூறினார்.
அப்போது மிக பதட்டமாக இருந்த காலம் . இதை குறித்து தணிக்கை குழுவின் ஆவனங்களை பார்த்தாலே தெரியும்.
நீலாம்பரி குறித்த காட்சிகளை நீக்க வேண்டும்” என்பது சென்சாரின் முடிவாக இருந்தால், படையப்பா படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும். என் உரத்த கருத்தால், அந்த பிரச்சினைகளில் இருந்து படையப்பா தப்பித்தது.
இந்த செய்தி தினமலர் சென்னைபதிப்பில்வெளியாகி இருந்தது .இதற்க்காக எனக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இப்படி என்னையும் ரஜினிக்கு தெரியும். தவிர, அவரே நதிநீர் பிரச்சினையில் ஆர்வமாய் இருப்பதாய் சொல்லி வருகிறார்.
ஆனால் முப்பது வருடங்கள் போராடி, நதிநீர் இணைப்புக்காக நான் பெற்ற அரிய தீர்ப்பை அவர் பொருட்படுத்தவே இல்லை.
எல்லாமே வேஷம்.
ஹூம்… மக்களுடைய அன்றாட வாழ்க்கையை திரைபடத்துறையே காப்பாற்றும் ! வாழ்க ஜனநாயகம் !!
தீதும்நன்றும்பிறர்தரவாரா!”
– இவ்வாறு சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.