
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் வலியுறுத்தி தன்னெழுச்சியாக தமிழக இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இப்படி போராடி வருபவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “பொறுக்கி, மனநிலை பாதித்தவர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து அவரது பக்கத்தில் பின்னூட்டம் இட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், சுவாயின் தரம்குறைந்த பதிவுகள் குறித்து, பலரும் புகார் அளித்ததால் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel