சென்னை,
இன்று நடைபெற்று வரும் திமுகவினரின் உண்ணாவிரதம் குறித்து கட்சியினர் கூறியதாவது,
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
தி.மு.க. எம்.பி. கனிமொழி, துரை முருகன், , திருச்சி சிவா, மற்றும் திமுக முக்கிய தலைவர்கள் , கே.என். நெரு உட்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
“அவசர சட்டத்தை தமிழகமே செய்ய முடியும் என்று இரு மாதங்களாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து வருகிறார்.
ஆனால் இரு நாட்களுக்கு முன் மத்திய அரசு வழக்கறிஞர்கள் சொல்லித்தான் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்ம் செய்கிறார். முன்னமே இதைச் செய்திருந்தால், தற்போதைய போராட்டங்களே தேவைப்பட்டிருக்காது.
தவிர தற்போது அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றினாலும் இதன் ஆயுள் ஆறு மாதங்கள்தான். ஆகவே நிரந்தர தீர்வாக, மத்திய அரசு சட்ட திருத்தத்தை செய்ய வேண்டும். அதற்கான போராட்டம்தான் இது” என்று தி.மு.க. தரப்பில் சொல்லப்படுகிறது.
விளையாட்டு பட்டியல் என்பது மாநில பட்டியலில் அதைத்தான் மத்திய அரசு வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கிறார். இதை இரு மாதங்களுக்கு முன் ஸ்டாலின் செய்திருந்தார். அனைத்து கட்சியினரையும் அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
தி.மு.க.வின் போராட்ட அறிவிப்பு இன்று காலை 8 மணிமுதல் நடைபெறும் உண்ணாவிரதத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர்.
நாங்க நாலு நாலா சாப்பிடமா சோறு தண்ணியில்லாமா போராட்டம் பண்றோம்… இப்போ வந்து நீங்க சொல்றீங்க போய் வேற பொழப்ப பாருங்கப்பா என்ற குரல்கள் இப்போது மாணவர்களின் போராட்டகளத்தில் இருந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.