தமிழர்களால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தவே முடியாது என பீட்டா நிர்வாகி சவால் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று முதல் சென்னை மெரினா கடற்கரை, மதுரை அலங்காநல்லூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புின் செயல் அதிகாரியான பூர்வா ஜோஷிபுரா, தமிழர்களால் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என்று இந்தியா டுடே இதழுககு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் பூர்வா ஜோஷிபுரா, “பீட்டா அமைப்பு உலகம் முழுவதும் செயல்பட்டுவருகிறது. தமிழர்களால் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் போராட முடியாது. இது தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் நான் வெளிப்படையாக விடும் சவால்! என்று தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாது தமிழ் ஆர்வலர்கள் உட்பட தமிழர்கள் கொதித்துப்போய் உள்ளனர்.