மதுரை:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, நேற்று முதல் விடிய விடிய பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காநல்லூரில் குவிந்த இளைஞர்களும் இந்த மக்களுடன் போராடி வருகிறார்கள். இவர்களில் பலரை இன்று காலை காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி, இப்போது அலங்காநல்லூரின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  ஜல்லிக்கட்டு போட்ட நடத்த  ஒத்துழைப்பு வழங்காவிட்டால், அமைச்சர் கடம்பூர் ராஜு வீடு அல்லது அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கக்கோரி சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் இன்று காலை முதல் ஏராளமான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.