இந்தூர்:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக குஜராத் அணி மும்பை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
மத்திர பிரதேசத்தில் உள்ள இந்தூரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நடந்தது. இதில் மும்பை&குஜராத் அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 228 ரன்கள், குஜராத் அணி 328 ரன்கள் எடுத்தன. மும்பை அணி 2வது இன்னிங்ஸில் 411 ரன்கள் எடுத்தது. 312 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சை குஜராத் அணி தொடங்கியது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 5ம் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. அபிஷேக் நாயர் பந்தில் சமித் 21 ரன் எடுத்து அவுட்டானார். பன்சால் 34 ரன்கள் எடுத்தார். பார்கவ் 2 ரன்களுடன் ஏமாற்றினார். பின் கேப்டன் பார்த்திவ், ஜுனெஜா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜுனெஜா 54 ரன்களும், பார்த்திவ் 143 ரன்களும் எடுத்தார்.
முடிவில், குஜராத் அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜுல் பாட் 27 ரன்களுடனும், சிராக் காந்தி 11 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி 42வது முறையாக கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துபோனது.