சென்னை,

ங்கிகளில் போதுமான அளவு பணம் உள்ளதாக மத்திய அரசு கூறுவது முற்றிலும் பொய் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் தொடங்கிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் 28ம் ஆண்டு மாநாட்டில் வங்கி ஊழியர் சங்க தலைவர் கூறினார்.

இன்று முதல் (8ந்தேதி)  11ந் தேதி வரை 4 நாட்கள்  நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான  வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இன்று மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் பேசியதாவது,

வங்கிகளில் போதுமான பணம் இருப்பாக மத்திய அரசு பொய் கூறி வருகிறது. வங்கிகளில் போதுமான பணம் இல்லாமல் தட்டுப்பாடு நிலவுவது உண்மை. போதுமான பணம் வங்கிகளில் உள்ளதாக அரசு முற்றிலுமாக பொய் கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.

மேலும் மக்களுக்கு  தேவையான அளவு பணத்தை அரசால் அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக  பொதுமக்களை வதைத்து வருகிறது மத்திய அரசு என்றார்.

மேலும்வி ஜய் மல்லையா போன்றோரை குற்றவாளிகளாக அறிவிக்க மத்திய அரசுக்கு தைரியம் இல்லை எனவும் சாடினார்.

இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் முத்தரசன், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.