டில்லி,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கேஹர் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர்-ஐ நியமித்து ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டடார். அதைத்தொடர்ந்து இன்று உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜக்திஷ் சிங் கேஹார் பதவியேற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தாக்கூர் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய தலைமை நிதிபதியாக நீதிபதி ஜக்திஷ் சிங் கேஹார் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று அவர், உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
64 வயதாகும் திரு. ஜக்திஷ் சிங் கேஹார், 7 மாதங்களுக்கு இப்பதவியினை வகிப்பார்.
ஏற்கனவே கேஹர் நியமனத்துக்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்று சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.