
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, “சசிகலா முதல்வர் பதவியை ஏற்கவேண்டும்” என்று தனது லெட்டர்பேடில் அறிக்கை எழுதி வெளியிட்டார். இதை முக ஸ்டாலின் கண்டித்தார்.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் மீது எதிர்விமர்சங்களை வைக்கிறார்கள் நெட்டிசன்கள்.
“சமீபத்தில் வெளியான, தர்மதுரை படத்தில் இடம் பெற்ற “ஆண்டிப்பட்டி_கணவாய்_காத்த ு_ஆளைத்_தூக்குதே..” என்கிற பாட்டைப் புகழ்ந்து அப்பட இயக்குநருக்கு தனது எதிர்க்கட்சித் தலைவர் லெட்டர் பேடில் கடிதம் எழுதினார் ஸ்டாலின்.

எதிர்கட்சி தலைவர் லெட்டர் பேடை இதற்கெல்லாம் பயன்படுத்துவது மட்டம் சரியா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் @பழ.கௌதமன்.
இதேபோல நெட்டிசன்கள் பலரும் இது குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel